மன்னார்குடி,

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி போலீசாரிடமிருந்து தப்பித்து வந்த பாரதியார் மேலநாகையில் தங்கியிருந்தார். சுமார் 10நாட்கள்  வயல்கள் சூழ்ந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பாரதியின்  தலைமறைவு வாழ்க்கையின்போதுதான்  பாருக்குள்ளே நல்ல நாடு என்னும் அமர கவிதை உருவானது. பாரதியாரின் அந்த தலைமறைவு  வாழ்க்கையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகளை தமுஎகசவின் மன்னார்குடி கிளை நடத்தி வந்தது. முதல் நிகழ்ச்சியாக 17.10.2018 அன்று பள்ளி கல்லூரிகளுக்கான கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில்  1653 மாணவ மாணவிகள்  25 பள்ளி, கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்டனர். இரண்டாவது நிகழ்ச்சியாக பாரதி என்னும் பெயர் கொண்ட மாணவ மாணவிகளின் சங்கம நிகழ்ச்சி பாரதி தலைமறைவு வாழ்க்கையின்போது தங்கியிருந்த மேல நாகையில் அவரது நினைவிடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச கிளை செயலாளர் இரா.யேசுதாஸ் தலைமை வகித்தார். தமுஎகச கோட்டூர் தலைவர் டி.சீனிவாசன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். கிளை உறுப்பினர் கோகிலவாணி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் துணைத்தலைவர் புகழேந்தி, கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் முரளி, ஆகியோர் பேசினார்கள்.  குழந்தை தரணி பாரதி பாரதியார் பாடல்களை பாடினார்.

மேலும், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு, மேலநாகை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கும் மன்னார்குடி தேரடி திடலுக்கும்  பாரதி பெயரை  சூட்ட வேண்டும் என்ற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் இரா.தாமோதரன் சிறப்புரையாற்றினார். பாரதி பெயர் கொண்ட 40 மாணவ மாணவியர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் தமுஎகச கிளை நிர்வாகிகளும் ஊர் மக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.  நிறைவாக. பாரதி அறக்கட்டளையின் மேலநாகை பாரதி பூமிநாதன் நன்றியுரையாற்றினார். 17.10.2018 அன்று நடைபெற்ற கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு தமுஎகச மாநிலத் தலைவர்களால்  டிசம்பர் 11 பாரதி பிறந்த நாளில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படவிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.