காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.

ஊரப்பாக்கம், ஐயஞ்சேரியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் விஜய் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அங்கு, கடந்த 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜய், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 நாட்களாக மேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிஇரவு சிகிச்சை பலனின்றி மாணவன் விஜய் உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: