கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள சந்த்ரகாச்சி ரயில் நிலையத்தில் நாகர்கோயில்-சாலிமர் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் வருவதாக ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பயணிகள் நடைமேம்பாலம் வழியாக விரைந்து வந்தனர். மேலும் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் இருந்த பயணிகள் சிலரும் நடைமேம்பாலத்தில் ஏற முயன்றனர்.

இதனால் ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடியதால், நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: