நாமக்கல்,
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கக்கோரி நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுற்றுவட்டாரம் தட்டாங்கொட்டை, குப்பாண்டாபாளையம், படைவீடு பகுதிகளில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 20 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டும். இதுதொடர்பாக விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இருதரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகரக் குழு உறுப்பினர் ஜே.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் கே.மோகன், முத்துக்குமார், பாலுசாமி, பொன்னுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டாட்சியர் ரகுராமனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.