சென்னை
இந்தியாவின் முன்னணி உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்  நவம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.இந்தத் தொடரில் பங்கேற்கும் தமிழக அணி புதனன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில்,கேப்டன் பொறுப்பை மட்டும் முன்கூடியே அறிவித்துள்ளனர்.
கடந்த சீசனில் தமிழக அணியின் கேப்டனாக இருந்த முகுந்தை அதிரடியாக நீக்கி (கேப்டன் பொறுப்பில் மட்டும்) அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான பாபா இந்திரஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“எலைட் பி” பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் (நவம்பர் 1-ஆம் தேதி) திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.