தருமபுரி : ஆழ்குழாய் பம்ப்பில், மண் கலந்த குடிநீர் வருவதாகக் கூறி, அப்பகுதியை சேர்ந்தவர்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழியிடம் மனு கொடுத்தனர்.

தருமபுரி மாவட்டம், பத்தாளப்பள்ளம் பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொது ஆழ்குழாய் பைப் அமைக்கப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, இந்த அடிபம்பில், போர்வெல் துருப்பிடித்து, சேறும் சகதியுமாக தண்ணீர் வருகிறது. இதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையுமில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: