புதுதில்லி:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்களை, தங்களுடைய தலைவர்கள் போன்று காட்டிக்கொள்ள தற்போது ஆர்எஸ்எஸ் – பாஜக முயற்சிகள் மேற்கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி
வித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
“தற்போது ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்கள் விரக்தியின் எல்லைக்கே சென்று, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களையெல்லாம் தங்கள் தலைவர்கள் போல் காட்டுவதற்கான இழி முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் நடத்திய மகத்தான சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ அதன் அரசியல் அங்கங்களுக்கோ எவ்வித
மான பங்கும் கிடையாது என்பது நன்குநிறுவப்பட்ட ஒன்றாகும். அதுமட்டுமல்ல, இதற்கு முற்றிலும் மாறாக, அவர்களின் நடவடிக்கைகள் பல பிரிட்டிஷாரின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் விதத்திலேயே அமைந்திருந்தன. இத்தகைய தங்களின் இழிசெயல்களைத் துடைத்தெறியும் முயற்சியாக, தற்போது இவர்கள் சர்தார் பட்டேல் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களையும் தங்கள் தலைவர்கள் போல் காட்டிக்கொள்ள முயன்றுள்ளனர்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குத் தடை விதித்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அதே போன்று, சுபாஷ் சந்திர போஸ், இந்திய
தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த போதுதான், ஒரு நபர் ஒரே சமயத்தில் காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபை மற்றும் முஸ்லீம் லீக் போன்ற வகுப்புவாத அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது என்று தடை விதித்தார். மதவெறி அரசியலை நிராகரித்திட நாட்டு மக்களை அணிவகுக்கச் செய்ததில் சர்தார் பட்டேலுக்கும் சுபாஷ் சந்திர போஸூக்கும் முக்கிய பங்கு உண்டு.

இப்போது இத்தகு தலைவர் களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக மேற்கொள்ளும் இழிமுயற்சிகள், நாட்டு மக்களால் கண்டனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.” இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.