ஆண்டிப்பட்டி:
கடந்த ஆகஸ்ட் 2018ல் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப டைப்ரைட்டிங், சுருக்கெழுத்துத் தேர்வுகளின் முடிவுகள் அக்.20ம் தேதி அரசுத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் திங்களன்று தொழில்நுட்ப இயக்ககத்தால் வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வுகளில் ஆண்டிபட்டி அன்பு ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவி டி.பாரததேவி – தமிழ் முதுநிலையில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் 122 மாணவர்கள் சிறப்பு முதல் வகுப்பிலும் 84 மாணவர்கள் முதல் வகுப்பிலும், 24 மாணவர்கள் இரண்டாம் வகுப்பிலும் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட அளவில் அதிக எண்ணிக்கையில் மொத்தம் 230 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மேலும் கணினியில் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்விலும் தொடர்ந்து 16 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பயிலகம் பிப்ரவரி 2018ல் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப டைப்ரைட்டிங் தேர்விலும் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பெற்ற மாணவியையும் மற்றும் சிறப்பாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பயிலக தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.