கோவை,
குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷனாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என இ.பி.எப் பென்ஷனர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இ.பி.எப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் செவ்வாயன்று கோவையில் சங்கத்தின் தலைவர் கே.புஷ்பராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஆர்.நாகராஜ் துவக்கவுரையற்றினர். சென்னை இ.பி.எப்பென்ஷனர்கள் நல சங்கத்தின் செயலாளர் கே.பி.பாபு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷனாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். இ.பி.எப்பென்ஷனர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவ வசதியினை அளிக்க வேண்டும். கடந்த 2001 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஆண்டு உயர்வினை மீண்டும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தி ஆளுநர் மூலம் பிரதமருக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் செயலாளர் கே.குமாரசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.