கோவை,
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நியாயமான போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கோவையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்டிசி பஞ்சாலை, மின்வாரியம், போக்குவரத்து, குடிநீர், டாஸ்மாக், சிவில்சப்ளை, கூட்டுறவு ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்களோடு பேசி நியாயமான போனஸ் வழங்க வேண்டும். இதேபோல், பஞசாலைகள், இன்ஜினியரிங், பெட்ரோல் பங்க், ஓட்டல், தங்கநகை, கான்டிராக்ட், ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான போனசை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செவ்வாயன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தங்கநகை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓட்டல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.ராஜா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கே.மனோகரன், ரபீக், அருணாச்சலம், ஜோதிபாசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.