திருப்பூர்: திருப்பூரில் அனைத்து வகையான தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் போனசை உடனடியாக வழங்கக்கோரி சிஐடியு சங்கத்தின் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீபாவளிக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் காலம் கடத்தாமல் உரிய காலத்தில் போனஸ் வழங்க வேண்டும். பீஸ்ரேட் தொழிலாளர்களுக்கு வேலை செய்த நாட்களுக்கு சதவிகித அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். 30 நாட்கள் வேலை செய்தால் போனஸ் என்ற போனஸ் சட்டத்தை அமலாக்கிட வேண்டும். மேலும், பீஸ்ரேட், காண்ட்ராக்ட் உள்ளிட்ட அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் திங்களன்று திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், பனியன் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.