திருவாரூர்: என் மீது அவதூறு சொல்லி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்வேன் என மன்னார்குடியில் நடந்த திமுக கூட்டத்தில் டிஆர் பாலு பேசினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் துரை முருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டி.ஆர். பாலு,“தேசிய நெடுஞ்சாலை துறையில் விட்ட டெண்டரில் என் மீதான ஊழல் குற்றச் சாட்டை நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” என்றார். என் மீது இப்படி ஒரு அவதூறு சொல்லி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: