குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் ஆடுதுறை-தரங்கம்பாடி சாலையில் நச்சினார்குடி முதல் அனந்த நல்லூர் கிராமம் வரை 5 கி.மீ தொலைவுக்கு வீரசோழன் ஆற்றங்கரையில் 200 ஆலமரப் போத்துகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கோமல் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் பொறியாளர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ரவீந்திரபாரதி, பொருளாளர் இமயவரம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கிஇருப்பதால் மரப்போத்துகள் துளிர்விட்டு வளரத் தொடங்கிவிடும் என்பதால் முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் இப்பணியை செய்து முடித்துள்ளனர். இதில் விஜய சரவணன், நந்தகுமார் மற்றும் ஆசிரியர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.