லக்னோ:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், நான்கரை ஆண்டுகள் முடிந்த பின்பும், சில ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாக இல்லை.

அண்மையில், ரயில்வேயில் அறிவிக்கப்பட்டிருந்த 2 லட்சம் வேலைகளுக்கு 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்து அதிர்ச்சி அளித்தனர். பாஜக ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தில் 1100 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியியல் பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ராஜஸ்தானில் 393 அலுவலக உதவியாளர் பணிக்கு 129 பொறியியலாளர்கள், 23 வழக்கறிஞர்கள், ஒரு ஆடிட்டர் உட்பட ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.

தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில், 62 காவல்துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, ‘மெசஞ்சர்’ எனப்படும் இந்த பணிக்கு, வெறும் 5-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஆனால், இதற்கு, 3 ஆயிரத்து 700 பிஎச்டி பட்டதாரிகள் உட்பட 28 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரிகளும், 50 ஆயிரம் பட்டதாரிகளும் விண்ணப்பித்து, வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமைக்கு சாட்சியாக மாறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.