இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெட்ரோல் விலையை விட டீசலின் விலை உயர்ந்திருக்கிறது. இது கடந்த நான்கு ஆண்டு கால மோடி ஆட்சியின் அவலத்திற்கு ஒரு சிறு உதாரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுக்க ஆகும் செலவு மற்றும் லாபத்துடன் சேர்த்து விலை வைத்தாலும் டீசலின் விலை ரூ 48 ஆகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மத்திய மாநில அரசுகள் நிலத்தில் பாதி கிணறு என்பது போல் அதிகளவிலான வரிகளை தொடர்ந்த விதித்து வந்ததன் காரணமாக இன்று டீசலின் விலை ஒடிசா மாநிலத்தில் ரூ 80.78 காசுக்கு விற்கப்படுகிறது. இது பெட்ரோல் விலையை விட ரூ 13 காசுகள் அதிகம் ஆகும்.
சர்வசதே சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் பெட்ரோல் ரூ.84.64-க்கும், டீசல் ரூ.79.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் டீசலுக்கான அடிப்படை விலையை லிட்டருக்கு 43.02 ரூபாயில் இருந்து 48.02 ரூபாய்க்கு (ஐந்து ரூபாய்) உயர்த்தின. பெட்ரோலுக்கான அடிப்படை விலை அதே 43.49-ல்லேயே விற்கப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 80.97 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.90. ஆக ஏழு பைசா கூடுதலாக விற்கப்படுகிறது.
ஒடிஸாவில் (Vlaue Added Tax)என்றழைக்கப்படும் வாட் வரி பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே 26% தான். மற்ற மாநிலங்களில் பெட்ரோலை விட டீசலுக்கு குறைவான வாட் வரியே விதிக்கப்படும். ஆனால் ஒடிஸாவில் சில நிர்வாக வசதிகளுக்காக டீசல் மற்றும் பெட்ரோலுக்கு ஒரே வாட் வரி விகிதத்தையே ஒடிஸா மாநில அரசு பின் பற்றி வருகிறது.
மத்திய அரசு விதிக்கும் கலால் வரி பெட்ரோலுக்கு 17.88 ரூபாய். டீசல்க்கு 13.83 ரூபாய். பெட்ரோலுக்கான டீலர் கமிஷன் 3.50 ரூபாய், டீசலுக்கு 2.50 ரூபாய்.
அதன்படி பெட்ரோலுக்கு அடிப்படை விலை 43.49+ கலால் வரி 17.88+ மாநில வாட் வரி 16.03+ டீலர் கமிஷன் 3.50=80.90 ரூபாய்.
டீசலுக்கு அடிப்படை விலை 48.02+ கலால் வரி 13.83 + மாநில வாட் 16.62+ டீலர் கமிஷன் 2.50= ரூ.80.97 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.