சேலம்,

சேலம் மாநகராட்சி 21-வது கோட்டம் அரியாகவுண்டம்பட்டி கீழ்தெரு பகுதியில் மூன்று ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்து கிடைக்கும் தார்ச்சாலை மற்றும் சாக்கடையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கிளைத் தலைவர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற  இந்த கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.பிரகாஷ் மற்றும்  கிளை நிர்வாகிகள் ஆர்.சிவா, ஜெ.ராமன், ஆர்.ரமேஷ், வி.கண்ணன், ஆர்.மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், கட்சி முன்னணி ஊழியர்கள் ஜெயபால், வெள்ளையகவுண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பெரும்பான்மையான பொதுமக்கள்  கையெழுத்திட்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், பகுதியில் சுகாதார சீர்கேடு வருவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் சாலை மற்றும் சாக்கடை வசதிகளை சீர்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.