ஈரோடு,

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் சார்பில்  மலை வட்டார 2ஆவது மாநாடு கடம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் தீர்மானங்களும் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு   சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தின் மலை வட்டார தலைவர் பி.தங்கவேல் சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.ராஜாமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மற்றும் என்.சுப்பிரமணி அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சகாதேவன் மாநாட்டை துவக்கி பேசினார் மற்றும் மாநில குழு உறுப்பினர் சின்னசாமி வேலை அறிக்கையை வாசித்தார்.  மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் வே.ஏழுமலை மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் எஸ்டி சான்றிதழ் வழங்கவேண்டும். இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை தேடி இடம் பெயர்ந்து செல்வதை தடுக்கவேண்டும். வன உரிமைச்சட்டம் 2006யை முறையாகவும் முழுமையாகவும், அமல்படுத்த வேண்டும். மல்லியம்மன் துர்க்கம் மற்றும் மாக்கம்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவமனை மாற்றிட வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தில் தேர்வான புதிய நிர்வாகிகள் பின்வருமாறு,

புதிய நிர்வாகிகளாக மலை வட்டார தலைவராக ராஜேந்திரன், செயலாளராக சி.சின்னசாமி,  பொருளாளராக ஆர்.ரங்கசாமி (எ)  ராஜாமணி உள்ளிட்ட 7 நிர்வாகிகளை கொண்ட 15 உறுப்பினர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.