மும்பை,

செல்பி எடுப்பதற்காக மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி கப்பலின் பாதுகாப்பு எல்லையை மீறி சென்றுள்ளார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பயணிகள் கப்பலான அங்கிரியா சிறு பயணிகள் கப்பல் வகையைச் சார்ந்தது. சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ள அங்கிரியா மும்பை மற்றும் கோவா ஆகியவற்றிற்கு இடையே வாரத்திற்கு 4 பயணங்களை அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று அதில் பயணம் மேற்கொண்ட மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வர் தேவேந்தர பட்னாவிஸின் மனைவி அம்ருதா செல்பி புகைப்படங்களை எடுக்க கப்பலின் பாதுகாப்பு எல்லையை கடந்து சென்றுள்ளார். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் விதிகளை மீறி கப்பலின் ஓரத்தில் உட்கார்ந்தபடி, தொடர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.