சேலம்,

காவல்துறையின் வீரவணக்க நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதில் காவல்துறை, ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒருபகுதியாக இன்று சேலத்தில் வீர மரணமடைந்த 414 வீரர்களுக்கு  சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 126 குண்டுகள் முழங்க  மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர், கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், (பொறுப்பு) சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜோர்ஜி ஜோர்ஜ், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.தங்கதுரை மற்றும் காவல் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், பணியின்போது உயிர் தியாகம்  செய்தோரின் குடும்பத்தார் நேரில் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.