கடந்த அக்டோபர் 6 – 8 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்தின் தகவல்களின்படி,

மோடி அரசாங்கமானது, பெரும் கார்ப்பரேட்கள், வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டே வெளியேறுவதற்கு, மோடி அரசாங்கம் உதவி இருக்கிறது என்பது இப்போது நன்கு நிறுவப்பட்டுவிட்டது. நாட்டின் பொதுச் சொத்தை சூறையாடியவர்கள் இவ்வாறு நாட்டை விட்டுப் பறந்தோட, தேவையான வசதிகளைச் செய்து தந்தபின்னர், இப்போது அவர்கள் அவ்வாறு பறந்தோடியிருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று அரசாங்கம் கூறுகிறது.  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவின்படி, 2014 ஏப்ரலுக்கும் 2018க்கும் இடையே, நாட்டிலுள்ள 21 பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடன்களில் 3.165 லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.  இவை இவர்களுக்கு வழங்கிய கடன்களில் 44,900 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்திருக்கின்றன. அதாவது, இவை வழங்கிய கடன் தொகையில் தள்ளுபடி செய்த தொகையில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே வசூல் செய்திருக்கின்றன.

இவ்வாறு தள்ளுபடி செய்திருக்கும் தொகையின் அளவு என்பது, அரசாங்கம் 2018-19 பட்ஜெட்டில் பொது சுகாதாரத்திற்கும், கல்விக்கும் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ஒதுக்கிய 1.38 லட்சம் கோடி ரூபாயைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாகும். இவ்வாறு பொறுக்கியெடுக்கப்பட்ட சில கார்ப்பரேட்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டைச் சூறையாடுவதற்கு ஆட்சியாளர்கள் வசதி செய்து தந்திருப்பதன் காரணமாக இன்றைய தினம் வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன. இவ்வாறு சலுகை காட்டியிருப்பதில், சமீபத்திய உதாரணம், ஐஎல்&எப்எஸ் என்னும் (IL&FS- Infrastructure Leasing and Financial Services) நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதாகும். இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி ஓடுவதற்கும், அவர்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும் உதவிவரும் இந்த அரசாங்கம், விவசாயிகள் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதன் காரணமாக விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகி இருக்கிறது.

இவ்வாறு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.