சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங்கின் இரண்டாவது மகன் நிஷாந்த்சிங் உடல் சனிக்கிழமையன்று (அக்.20) அஸ்தினாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பெங்களூரிலிருந்து சென்னை வந்தபோது, ரயிலில் இருந்து தவறிவிழுந்து நிஷாந்த்சிங் அகால மரணமடைந்தார். சென்னையை அடுத்துள்ள அஸ்தினாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.அன்னாரது உடலுக்கு விடுதலைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யா, பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், ஏ.லாசர், என்.குணசேகரன், மதுக்கூர் ராமலிங்கம், கே.கனகராஜ், எஸ்.நூர்முகமது, பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வே.
மீனாட்சிசுந்தரம், எஸ்.ஏ.பெருமாள், ஆத்ரேயா, மூசா, பா.சுந்தர்ராஜன், க.உதயகுமார், க.பீம்ராவ், ப.ஜான்சிராணி, ஸ்ரீதர், சி.கல்யாணசுந்தரம், எஸ்.கண்ணன், ஆர்.வேல்முருகன், வெ.ராஜசேகரன், மாதவன், க.சுவாமிநாதன், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், டி.ரவீந்திரன், வி.குமார், வி.பெருமாள், எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராசன் (வடசென்னை), ஏ.பாக்கியம் (தென்
சென்னை), இ.சங்கர் (காஞ்சிபுரம்), ஆறுமுகம் (கடலூர்), ராமமூர்த்தி (சேலம்), தயாநிதி (வேலூர்), புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செந்தில், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன், பிஎன்எல்இயு தலைவர் செல்லப்பா, டிஆர்இயு தலைவர் ஜானகிராமன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் நெ.இல.சீதரன், விதொச செயலாளர் அமிர்தலிங்கம், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆனந்தன் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தென்சென்னை கிழக்குமாவட்டச் செயலாளர் மேயர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ப.தன்சிங் உள்ளிட்டு பல்வேறு கட்சித்தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.இதனைத்தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.