அபுதாபி,
பெருவெள்ள பாதிப்பிலிருந்து கேரளம் மீண்டுவருவதாகவும், நாட்டின் எதிர்காலத்துக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளத்தை தகர்க்க யாராலும் முடியாது எனவும் அவர் கூறினார். அபுதாபி இந்தியன் சமூக கலாச்சார மையம் மற்றும் கேரள உலக சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முதல்வர் மேலும் பேசியதாவது: கேரளத்தின மறுசீரமைப்புக்காக அனைத்து வெளிநாடுவாழ் மலையாளிகளும் ஒன்றுபட வேண்டும். நமது எதிர்காலத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நாம் ஒன்றுபட வேண்டும். நாட்டுக்காக நிற்போம் என்கிற மலையாளிகளின் உணர்வை யார் நினைத்தாலும் மாற்றிவிட முடியாது. பெருவெள்ள பாதிப்பை அனுபவித்த கேரளத்துக்கு யுஏஇ ஆட்சியாளர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. மலையாளிகளின் ஒத்துழைப்போடு கேரளத்தை புனரமைக்க முடியும். அதிற்கான அனைத்து உதவியும் வழங்க யுஏஇ அமைச்சர் ஷேக் நஹியான் பின் முபாரக் அல் நஹியான் உறுதியளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பனராயி விஜயன் தெரிவித்தார்.

யுஏஇயின் வளர்ச்சியில் மலையாளிகளின் பங்கு மகத்தானது எனவும், கேரள மக்கள் வாழ்வது தங்களது இதயத்தில் எனவும் அமைச்சர் அல் நஹியான் கூறினார். நிகழ்ச்சியின் போது, கேரளத்தின் புனரமைப்புக்கு ஏராளமான உதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதிகளை வெளிநாடுவாழ் மலையாளிகள் அளித்தனர். அக்டோபர் 17ஆம் தேதி ஐக்கியஅரபு அமீரகம் (யுஏஇ) சென்ற கேரளமுதல்வர் பினராயி விஜயன் அக்டோபர் 22ஆம் தேதி நாடு திரும்ப உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.