மதுரை,
நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம்
நடைபெற்றது. அதில் பங் கேற்ற கே.பாலகிருஷ்ணன் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாவட்டங்களில் ஆய்வு, பல்கலைக்கழக வேந்தர் நியமனம், நக்கீரன் கோபால் கைது, பேராசிரியர் நிர்மலாதேவி உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து விளக்கங்கள் அளித்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நிர்மலாதேவி விவகாரத் தில் சிறையில் உள்ள மூன்று பேரை வைத்து வழக்கை முடிக்க அரசு நினைக்கிறது.

இதில் சம்பந்தப்பட்டவர் களை சிபிஐ கண்டுபிடித்து விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும். நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகள் நேரில் தங்கள் பெற்றோர்களுடன் நீதிமன் றத்திற்கு வந்து இந்த வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகளை அடையாளம் காட்டவேண்டும். இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்படா விட்டால் மதுரையில் போராட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கர விழா அரசு விழா அல்ல. அது ஒரு அமைப்பு நடத்துகிறது. அதில் ஏன் ஆளுநர் பங்கேற்றார்? தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மீது நெடுஞ் சாலைத் துறை டெண்டர் முறைகேடு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. முதல்வர், துணை முதல்வர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் வழக்கு இருந்தால் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். சபரிமலைக்கு பெண் களை அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியிருந் தன. ஆனால், அதை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர் இப்போது மதப் பிரச்சனையாக்கப் பார்க்கிறார்கள். கேரள அரசு யாரையும் சபரிமலை கோவிலுக்குச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை. விரும்பி கோவிலுக்குச் செல்பவர் களை தடுப்பது ஏன்? என்றார். செய்தியாளர்கள் சந்திப் பின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.