கோவை,
கோவை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த அக். 8 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. இந்த பணியில், தன்னார்வலர்கள், வனத்துறையினர் என மொத்தம் 100 பேர் ஈடுபட்டனர். புலிகளை நேரடியாகப் பார்த்தல்,காலடித் தடம் மற்றும் கேமராக்களை கொண்டு கண்காணித்தல் போன்ற பல்வேறு முறைகளில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கோவை வனப்பகுதிகளுக்குள் ஏராளமான இடங்களில் புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.  குறிப்பாக, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சரகங்கங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் புலிகள் தென்பட்டுள்ளன. இதேபோல், பல்வேறு பகுதிகளில் புலிகளின் காலடித் தடங்கள் மற்றும் சுவடுகள் பதிவாகியுள்ளது. மேலும், சிறுத்தைகள், மான்கள் மற்றும் யானைகளை அதிகளவில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “புலிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வனப்பரப்பு நல்ல நிலையில் உள்ளது என்பதை காட்டுகிறது. கோவையில் புலிகள் நல்ல நிலைமையில் வாழ்வதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.” என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: