ஜலந்தர்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த அர்ஸ்தீப் சிங் என்ற 10 வயது சிறுவன் இந்தாண்டிற்கான மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை வென்றுள்ளார்.

லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டிரி அருங்காட்சியகத்தின் ஆண்டு விழா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், Pipe Owls என்ற புகைப்படத்திற்காக 10 வயது சிறுவன் அர்ஸ்தீப் சிங்கிற்கு இந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர்(ஆசியா) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறுவன் ஒருமுறை தனது தந்தையுடன் கபூர்தலா நகரத்திற்கு செல்லும் வழியில் குழாய் ஒன்றினுள் இரு பறவைகள் செல்வதை பார்த்துள்ளான். உடனே தனது தந்தையிடம் வாகனத்தை நிறுத்தக்கோரி சுமார் அரை மணிநேரம் பறவைகள் இரண்டும் வெளியே வருவதற்காக காத்திருந்து அப்புகைப்படத்தை அர்ஸ்தீப் எடுத்துள்ளான். அர்ஸ்தீப் எடுத்த இந்த படம் ’பி.பி.சி வைல்டுலைப் யூகே’ ’ஜெர்மனி மற்றும் இந்தியா’ மற்றும் லோன்லி பிளேனட் யூகே ஆகிய இதழ்களில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: