மன்னார்குடி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மன்னார்குடி கிளை 1500 மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியை புதன்கிழமை நடத்தியது.

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி போலீசாரிடமிருந்து தப்பித்து வந்த பாரதியார் மேலநாகையில் தங்கியிருந்தந்தார். பாரதியாரின் அந்த ஒருவார கால தலைமறைவு வாழ்க்கையின் நூற்றாண்டு நினைவாக மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டிகளை நடத்துவதென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மன்னார்குடி கிளை ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இன்று புதன்கிழமை சாதிகள் இல்லையடி பாப்பா என்னும் தலைப்பில் அந்தந்த பள்ளிகளிலேயே தமுஎகச உறுப்பினர்கள் மற்றும்  பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த  கட்டுரை போட்டிகள் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. . 6,7,8 வகுப்பு மாணவர்களின் கட்டுரைகள் ஒரு பக்க அளவிலும், 9,10 மாணவர்கள் இரண்டு பக்க அளவிலும், 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பக்கஅளவிலும் கல்லூரி மாணவர்களின் கட்டுரைகள் நான்கு பக்க அளவிலும் எழுதப்பட்டன.

இதே வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகளும் நடைபெற்றன. ஏ.4 வெள்ளை சார்ட்டில் பாரதியாரின் கருப்பு வெள்ளை படத்தை வரிசையாக அமர்ந்து மாணவர்கள் பாரதியின் உருவப்படத்தை வரைந்தனர். பிற்பகல் 2 மணியிலிருந்து போட்டிகள் துவங்கி 4 மணியளவில் முடிவுற்றன.  . தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் பின்னர் நடத்தப்படவிருக்கும் ஒரு விழாவில் வழங்கப்படும் என தமுஎகச கிளை செயலாளர் இரா.யேசுதாஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். மன்னார்குடியில் அசோக் சிசுவிஹார் மெட்ரிக் பள்ளி, செயிண்ட் ஜோசப்  பெண்கள் மேனிலை பள்ளி, செயிண்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளி, பாரதிதாசன் மெட்ரிக் மேனிலை பள்ளி, சவளக்காரன் ஆதிதிராவிடர் நல அரசு  மேனிலை பள்ளி, நெடுவாக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி, மன்னார்குடி  தேசிய மேனிலை பள்ளி தரணி மெட்ரிக் மேனிலை பள்ளி, எஸ்பிஏ மெட்ரிக் மேனிலை பள்ளி  மேல துளசேந்திரபுரம் அரசு உயர்நிலை பள்ளி, சேரன்குளம் அரசு மேனிலை பள்ளி, அருணாமழை பிஎட் கல்லூரி,மன்னார்குடி சன்முகா மெட்ரிக் மேனிலை பள்ளி,  பாமனி அரசு உயர்நிலை பள்ளி, சுந்தரக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி ஆகிய பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாவட்டக்குழு உறுப்பினர் கே. பிச்சைக்கண்ணு கிளை பொருளாளர் கே.வி. பாஸ்கர் உறுப்பினர்கள் எஸ். உஷாராணி, நசீமா, கோகிலவாணி, மணிகண்டன், பத்மநாபன், வெங்கடாசலம், கீதா பார்த்தசாரதி மற்றும் கிளை நிர்வாகிகள், தமுஎகச மாவட்ட தலைவர் ஆர். தாமோதரன், ஆகியோர் போட்டிகளின் பார்வையாளர்களாக சென்றிருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருள் சகோதரி, ஜாக்குலின் கவிதா  கற்பனா பொன்முகில் போன்றோர் மாணவர்களின் இந்த போட்டிகளை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்தனர். சாதிகள் இல்லையடி பாப்பா என்னும் பாரதியின் ஒற்றை கவிதை வரியை கொடுத்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கட்டுரை போட்டி நடைபெற்றது மன்னார்குடியின் வரலாற்றில் இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.