திருப்பூர்,
திருப்பூரில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் மனோகரன் உத்தரவின் பேரில், செவ்வாயன்று இரவு ஏபிடி ரோடு கரைத்தோட்டம் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது குடோன் ஒன்றில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் மத்திய காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த குடோனில் உரிமம் பெறாமல் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து குடோனில் இருந்து சுமார் 1,000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதன்பின் குடோன் உரிமையாளரான திருப்பூர் வெள்ளியங்காடு என்.ஜி.ஓ. காலனி முதல் வீதியை சேர்ந்த லிங்கம் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.