சென்னை:  ஆன் லைனில் பட்டாசு விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடை செய்யும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த போது ஆன் லைன் விற்பனையை கட்டுப்படுத்த எந்த விதிகளும் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் மனுவில் கூறப் பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆன் லைன் பட்டாசு விற்பனையை தடை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: