கோவை,
அக்.25 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என சத்துணவு சங்கத்தின் மாநில தலைவர் சுந்தராம்பாள் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சட்டப்படி குறைந்தப்பட்சமான ஓய்வூதியமான ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமும் அளிக்கப்பட வேண்டும். பணிக்குடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்பட வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கேற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகியகோரிக்கைகளை முன்வைத்து முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களும், அக்.10 ஆம் தேதியன்று பேரணியும் நடத்தப்பட்டது.

ஆனால், இந்த போராட்டங்களுக்கு பிறகும் எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு செவி சாய்காமல் இருந்து வருகிறது. ஆகவே, அடுத்தகட்ட போராட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அக்.25 ஆம் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த சந்திப்பின் போது சங்கத்தின் மாநில பொருளாளர் பேய்த்தேவன், மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.