புதுதில்லி:
விமானங்களில் இருப்பதுபோல ரயில்களில் விரைவில் கருப்புப் பெட்டி அல்லது உரையாடல் பதிவுக் கருவியைப் பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விமானங்கள் விபத்தில் சிக்கும்போது, விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில் கருப்புப் பெட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த முறையை ரயில்களிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இப்போது பல்வேறு நிலைகளில் தீவிரமாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மேம்படும். ரயில் விபத்துகள் ஏற்பட்டால் அதில் எந்த இடத்தில் தவறு நேர்ந்தது என்பதை அறிந்து பிற்காலத்தில் அதுபோன்ற தவறுகளை தவிர்க்கவும் முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.