கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி அருகே உள்ள ஹரிபால் பகுதியில் உள்ள பாலத்தில் இன்று காலை  சென்று கொண்டிருந்த பேருந்து அப்பகுதியில் இருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.