கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அதிக வருவாய் ஈட்டக்கூடியது. இரண்டு லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வந்த இப்பகுதியில் தற்போது நாற்பத்தி எட்டாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

வால்பாறையை விட்டு மக்கள் நகரத்திற்கு வரக்காரணம் சம்பள பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமை, காட்டை ஒட்டி இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு , அழைய விருந்தியாளியாக வரும், வன விலங்குகள்!.

தொழிலாளர்களுக்கு உரிய நிலம், சொந்த வீடு, மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத போதும் 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் இருந்த காலம் போய் ? தற்போது மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சியின் தொழிற்சங்கங்கள், மேலும் சில தொழிற்சங்க அமைப்புகளும் தோட்ட தொழிலாதிபர்களிடம் விலைக்கு போயிருப்பது வேதனை அளிப்பதாக சி ஐ டி யூ வால்பாறை பகுதியின் பொதுச்செயலாளர் பரமசிவம் , ‘ஈரம் நிறைந்த இதயத்தோடு’நம்மிடம் பேசத்தொடங்கினார்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் 2002 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்து வந்ததாகவும், முறையான தினக்கூலி இல்லாததால் நகரத்திற்கு மூன்று சதவிகித மக்கள் சென்று விட்டதாக தெரிவித்தார். மீதமுள்ள , 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்தான், தற்போது வால்பாறையில் வசித்து வருகின்றனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 2002 ஏப்ரல் , மே மாதத்தில் தினக்கூலியான 76.85 ரூபாய்க்கு பதிலாக 72 ரூபாய் மட்டும் கணக்கிட்டு வழங்கப்பட்டது. தினக்கூலியில் இருந்து 4ரூபாய் 85 பைசா குறைக்கப்பட்டதால், சில தொழிற்சங்கங்கள் சார்பாக 2002ஆம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தோட்ட அதிபர்கள் தொழிற்சங்க உறுப்பினருக்கான சந்தாவை தொழிலாளியிடமிருந்து பிடித்து கொடுக்க மாட்டேன் என தொழிற்சங்கத்தை மிரட்டி பார்த்தது.

சிறிதும் அஞ்சாத சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் நிலுவைத்தொகையை, ஜனவரி 2002 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2004 வரை கணக்கிட்டு, ஒரு நாளுக்கு 4.85 ரூபாய் வீதம் 939 நாட்களுக்கு ,ரூபாய் 4554.15 பைசாவை தேயிலை தோட்ட அதிபர்கள் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். ஆனால் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பணத்தை முழுமையாக கொடுக்க, உயர் நீதிமன்றம் ஆணையிடாமல், தேயிலை தோட்ட அதிபர்களுக்கு சாதகமாக தொழிற்சங்கங்களோடு இணைந்து பேசி முடிவெடுக்க உத்திரவிட்டது. உயர் நீதிமன்றம் அதிபர்களுக்கு சாதகமாக காலம் தாழ்த்தி வருவதாக தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. ஏழு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் சி ஐ டி யூ தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் தோட்ட அதிபர்களோடு கைகோர்த்துக்கொண்டு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த நிலுவைத்தொகை ரூபாய் 4554.15 பதிலாக 1400 ரூபாய் கொடுத்தாலே போதும் எனவும், வழக்கின் செலவுத்தொகையை ஏற்றுக்கொள்ளவும், உறுப்பினர் சந்தா தொகையை தொழிலாளர்களிடம் பிடித்து கொடுக்க வேண்டும் என நிபந்தனை வித்தித்துள்ளனர். ஏழு கட்ட பேச்சு வார்த்தையிலும் சி ஐ டி யூ மட்டும் தொழிலாளர்களிடம் பிடித்த முழுமையான பணத்தை கொடுக்க வலியுறுத்தி மற்ற தொழிற்சங்கங்களுக்கு எதிராக செயல்பட்டது . குறிப்பிடத்தக்கது.

மேலும் 2002 ஆம் ஆண்டு , முதலாம் காலாண்டில் பஞ்சப்படி ரூபாய் 40.56 பைசாவில் , தொடங்கி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை பஞ்சப்படி உயரும் வகையில் கொள்கைகள் தொழிலாளர் நலச்சட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 1. ஜனவரி  2002 ஆம் ஆண்டு முதல் 15.06.2008 ஆம் அண்டு வரை தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பஞ்சப்படி தொகையை ,விடுமுறை இல்லாமல் ஒரு தொழிலாளர் பணி செய்திருந்தால் அவருக்கு 24 ஆயிரத்தி 341ரூபாய் 12 பைசா கொடுக்க வேண்டும். தொழிலாளர் விடுமுறை எடுத்திருந்தால் கூட ஒரு தொழிலாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தோட்ட தொழிலாதிபர்கள் போடும் பிச்சை காசுக்காக , தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் அடமானம் வைத்து விடுவதாக தெரிவித்தார். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் சி ஐ டி யூ தொழிற்சங்கம் விலைபோகமல் தொழிலாளர்களுக்காக தொடர்ச்சியாக போராடும் என்றார்.

2008 க்குப்பிறகு தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டாலும், கேரளா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கு 350 ரூபாய் வழங்கப்படுவதைப்போல் , வால்பாறை தொழிலாளர்களுக்கு கிடைக்குமென்பது கனவாகவே இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பருவ மழை அதிகளவு பெய்ததால், தேயிலை கொழுந்து அதிகமாக கிடைக்கிறது. இதனால் தொழிலாளர்கள் காலை எட்டு மணி முதல் மாலை ஏழு மணி வரை காட்டு விலங்குகளுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எட்டு மணி நேர வேலை என்பது கானல் நீராகவே இருக்கிறது.

பல தேயிலை தோட்டங்களில் இன்றைக்கும் ஐயா, சாமி , துரை என மேனேஜர்களை தொழிலாளர்களும் , அவர்களது குடும்பத்தினரும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மேனேஜர்கள் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி, தகாத வார்த்தைகளால் தீட்டுவது வாடிக்கையாக நடப்பதாக , படித்து வேறு பணியில் இருக்கும் தொழிலாளர்களின் சந்ததிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு , நிலம் கிடையாது. முகாமில் இருக்கும் அகதிகளைப்போல நிர்வாகம் கொடுக்கும் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மருத்துவம், கல்வி, மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வனத்தையொட்டி இருக்கும் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் யானை, சிறுத்தை, காட்டெருமை, பாம்புகள் வந்தாலும், அச்சத்தோடு வாழ்ந்து வருவது வேதனையாக இருந்தாலும், தொழிலுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என மாரியம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை நகரத்திற்கு , பொருட்களை வாங்கி செல்ல வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என பொதுக் கழிப்பிட வசதி கூட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செய்து தராதது , ஆளும்கட்சியின் இயலாமையையே காட்டுவதாக பெண் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மனசாட்சி இல்லாத தொழிற்சங்கங்கள், மண்ணோடு புதைந்தாலும் விஷக்காளானாய் மீண்டும் முளைக்கும் , தொழிலாளர்கள் இனம் கண்டு கொண்டால் மட்டுமே ,தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றார் . மேலும் வால்பாறை மேம்பாட்டு தொழிற்சங்கம் , தீரன் தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் , பி .எம் .எஸ் , ஐ என் டி யூ சி தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் தற்போது தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையில் பெரும் மோசடி நடப்பதை உணர்ந்து சி ஐ டி யூ வோடு இணைந்து தொழிலாளர் பாதுகாக்கும் தொழிசங்க கூட்டமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சியை இழந்து, இறந்தாலும், சுடுகாடு இல்லாததால், தேயிலை தோட்டத்திலேயே புதைத்து உரமாக்கப்படுகின்றனர்.
[3:51 PM, 10/16/2018] Kannantheekkathir: கோவை மாநகராட்சி, 21 வது வார்டில் வசித்து வரும் பொதுமக்கள், வசிக்கும் இடத்திற்கான பட்டா அல்லது அருகாமையில் மாற்று இடம் வேண்டி தங்களது வீடுகளில் இருந்தவாறு இன்று ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள முத்தண்ணங்குளத்திற்கு அருகில் கடந்த 90 வருடங்களாக 350 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.

2018-19 நிதி நிலை அறிகையில் நீர்நிலை அருகில் உள்ள மக்களுக்கு தனியார் நிலங்களை கையகப்படுத்தி குடியிருக்க மாற்று இடம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முத்தண்ணங்குளத்தை ஒட்டி வசித்து வரும் குடியிருபப்புகளை அகற்றுவதற்கான பணிகளை குடிசைமாற்று வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா அல்லது நகருக்குள் குடிமனை வழங்கிடக் கோரி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, போரட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறியதாவது, ’90 வருடங்களாக நீர்நிலைக்கு பாதிப்புகள் இல்லாமல், இங்கு வசித்து வரும் 388 நபர்களுக்கு அருகாமையில் உள்ள வீரகேரளம் மற்றும் நரசம்பதி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிமனை ஒதுக்கப்படும் என 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. 25 ஏக்கர் பரப்பிலான அந்த இடம் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு 12 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு, தற்போது குத்தகை காலம் முடிந்துவிட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறியும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என்றும் நகரின் பூர்வகுடி மக்களை நகரைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகிறோம். இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் நிலத்திற்கான மாநாடும், மக்களை திரட்டி தொடர் போராட்டங்களும் நடத்தப்படும்’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: