சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் கல்லூரி மாணவர் சிவக்குமார் தேவகோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் வந்தபோது மாணவர்க்கு அரிவாள் வெட்டால் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தேவகோட்டை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் சிவக்குமார் வயது 23 ஆண்டிச்சியூரணியைச் சேர்ந்தவர்.இம் மாணவர்  ஆண்டிச்சியூரணி அருகே வந்தபோது மூன்றுபேர் பேருந்தை நிறுத்தியிருக்கின்றனர்.பின்னர் பேருந்துக்குள் ஏறி சிவக்குமாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றிருக்கிறார்கள்.பலத்த காயமடைந்த சிவக்குமார் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை தகவல் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: