கோவை,
விவசாய நிலங்களை அழித்து கரூர்-கோவை ஆறு வழிசாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

கரூர் முதல் கோவை வரை ஆறு வழி பசுமை சாலை (என்.ஹெச் 67) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்தால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மட்டுமில்லாமல், அதை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகள், வீடுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட உள்ளது. மேலும், விவசாயத்தையே நம்பியுள்ள பல சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை அளிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.