சபரிமலை செல்ல மாலை போட்டு 41நாள் விரதத்தை துவக்கியிருக்கிறார் ரேஷ்மா
நிஷாந்த். இவர் ஆண்டுதோறும் இப்படி விரதம் இருப்பாராம் அங்கே செல்லமுடியாது  எனத் தெரிந்தும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக இந்த ஆண்டு விரதத்தின் முடிவில் அங்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

இதை அறிந்த பாஜகவினர் இவரை மிரட்டுகிறார்கள்;  இவர் வீட்டு முன்பு கூடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ரேஷ்மா போலிசில் புகார் செய்திருக்கிறார். ” எனது பயணம் ஒரு புரட்சி அல்ல, எனது பக்தியின் வெளிப்பாடு.
மாதவிடாய் பெண்ணை தீட்டாக்காது. சபரிமலை செல்ல அனுமதி என்பது பாலின சமத்துவ நீதி” என்று சொல்லியிருக்கிறார். இத்தகைய இந்து பக்தர்களைத்தான் எதிர்க்கிறது பாஜக!

இந்துக்களின் பக்கா எதிரி பாஜகவே

Leave A Reply

%d bloggers like this: