சிவகங்கைஅக்15-
லெயனோர்டு நகரில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே லெயனோர்டு நகரில் பேருந்து நின்று செல்ல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்னரசு,மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ்ராஜா ஆகியோர்  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 அவர் அளித்துள்ள மனு விபரம் வருமாறு இளையான்குடியிலிருந்து சிவகங்கை நோக்கி செல்கிற சாலையில் லெயோனர்டு நகர் உள்ளது. இந்நகரில் உள்ள மக்கள் இரண்டு கிமீ தூரம் சென்று திருவேங்கடத்தில் பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. இப் பகுதி மக்கள் நன்மை கருதி லெயோனர்டு நகரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரியை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்திரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: