சென்னை:
சென்னை பெருங்குடி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் உரிய பாது காப்பு உபகரணங்கள் இன்றி தூர்வார இறங்கிய 2 கூலித் தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் நீண்ட நாட்களாக பயன் படுத்தப்படாமல் பாழடைந்து கிடந்த தன்வீட்டுக் கிணற்றை தூர்வாரி சீரமைக்க எண்ணி, வேளச்சேரியில் இருந்து கூலித்தொழிலாளிகளான ஆறுமுகம் மற்றும் குமார் ஆகிய இருவரை அழைத்துள் ளார். இருவரும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கிணற்றுக்குள் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

சில நிமிடங்களில் இருவரும் உள்ளேயே மயங்கிச் சரிந்துள்ள னர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை யினர் கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தபோது இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. துரைப்பாக்கம் காவல் துறையினர் உடல்களை மீட்டு ராஜேந்திர
னிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: