விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த 14,15ஆகிய தேதிகளில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, சிஐடியு வடக்கு மாவட்டச்செயலாளர் எஸ்.முத்துக்குமரன்ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். சம்மேளன நிர்வாகிகள் ஜெ.லாசர், எஸ்.அப்பாதுரை, எம்.ஏ.பாபு, ஆர்.பாரி, எம்.ராஜகோபால், எம்.பி.கே. பாண்டியன், பி.ஜீவானந்தம், த.முருகேசன், ஆர்.ராகவன், ஏ.கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சம்மேளன உதவி செயலாளர் பி.குமார் நன்றி கூறினார். இம் மாநாட்டில் சம்மேளனத்தின் மாநிலத் தலைவராக எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளராக ஆர்.வெங்கடபதி, பொருளாளராக ஆர்.அருண்குமார், உதவி தலைவர்களாக எம்.அர்த்தநாரி, எம்.ராஜகோபல், ஏ.பிச்சைமுத்து, பி.என்.தேவா, பி.குமார், எம்.பி.கே. பாண்டியன், த. முருகேசன், மா. கணேசன், உதவி செயலாளர்களாக ஆர். பாண்டி, ஏ.கோவிந்தன், ஜி.கே. ராமர், ஆர்.ராஜன், பீர்முகம்மது, எம்.ராமன், ஆர்.பாரி, ஆர்.பேச்சிமுத்து ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.