திருவண்ணாமலை: ஆரணியில் பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் திமிரி என்ற பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திங்களன்று தனது மனைவி மற்றும் பேரனுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று பாலகிருஷ்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே முதியவர் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: