விருதுநகர்,
ஜிஎஸ்டி. வரியால் சிவகாசி மற்றும் திருப்பூரில் தொழில்கள் நசிந்து வருகின்றன என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக மேலிட பார்வையாளருமான சஞ்சய்தத் கூறினார்.

சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழக ஆட்சியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி இயக்கி வருகிறார்.  தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. தமிழக முதல் வர் மீது சிபிஐ. விசாரனை நடைபெற உள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றார். ஜம்மு- காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்றால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதா? இது ஆளும் கட்சியின் பலகீனத்தையே காட்டுகிறது. தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: