சிவகங்கை: தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூகநீதி மாவட்ட மாநாடு மானாமதுரையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில துணைத்தலைவர் செல்லக்கண்ணு, ஆகியோர் பேசினார். இம்மாநாட்டில் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக கந்தசாமி, மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர்களாக தண்டியப்பன், வீரையாக, ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு, இளையராஜா, மாவட்ட துணைச்செயலாளர்களாக சுரேஷ், ராமகிருஷ்ணன், செல்வராஜ், சண்முகப்பிரியா, பூமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சந்த்தம் கிராமத்தில் ஆதி திராவிட தலித் மக்கள் ஆதிக்க சாதியினரால் மூன்று பேர்  படுகொலை செய்யப்பட்டனர். பலருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. தலித் மக்களின் வீட்டுப்பொருட்களை சேதமுறச் செய்தனர். குற்றவாளிகள் அனைவரை கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையால் உறுதி கொடுக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகளை விசாரணை முடியும் வரை பிணையில் விட அனுமதிக்கமாட்டார்கள் என்கிற உறுதிமொழியை காவல்துறையை கட்டிக்காக்கவில்லை. சிலர் பிணையில் வெளிவந்து தலித் மக்களை அச்சுறுத்துகிறார்கள். இதன் காரணமாக பிணையில் வெளி வந்தவர்களை கைது செய்திட வேண்டும். கைது செய்யப்படாத குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். கச்சந்த்தம் கிராமத்திற்க்கு மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிமொழியை செயல்படுத்திட வேண்டும்.

அதாவது கச்சந்த்தம் கிராமத்திற்கு 24 மணிநேரமும் காவல்துறையின் பாதுகாப்பு இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்குவதற்கு ஏற்றாற்போல் கழிப்பறை வசதியும் செய்துதர வேண்டும். கச்சந்த்தம் கிராமத்தில் பள்ளிக்கூடத்தை, பால்பண்ணையை, திருப்பாச்சேத்தி காவல்நிலைய எல்லைக்குள் கச்சந்த்தத்தை கொண்டு வருதல், என்கிற உறுதிமொழியை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை திருப்பி அனுப்பி வீண் செய்யாமல் இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளுக்கு மாற்றாக புதிய குழும வீடுகளை கட்டி கொடுக்கப்பட வேண்டும்.

தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனைகளை நில அளவை செய்து தர வேண்டும். பூவந்தி, திருப்புவனம், நாகநாதபுரம், முனைவென்றி, உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை நில அளவை செய்து தரவேண்டும். கொம்புக்கரனேந்தல் கிராமத்தில் தலித் பாழடைந்த  குடியிருப்பை மாற்றி புது குடியிருப்பை உருவாக்க ஆதிதிராவிட ஆணைய உத்திரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.

தலித் மாணவர்களுக்கான கல்வித் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் மல்லல், அதிகரை, உஞ்சனை ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் செய்துதர வேண்டும். 2013 ஆகஸ்டு 15 சுதந்திரத்தன்று பாப்பான்குளத்தில் அரசு கட்டிக்கொடுத்த நான்கு வீடுகள் உள்பட 30 தலித் வீடுகளை பட்டபகலில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும், அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என அரசு அளித்த உறுதிமொழியை செயல்படுத்த வேண்டும். மானாமதுரை அருகே கருசற்குளம் கிராமத்தில் சாமி கும்பிடுவதை தலித் மக்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானங்களை விளக்கி மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.