சங்கரன்கோவில்:
பாலியல் வன்முறைகள் குறித்து பகிரங்கமாக பெண்கள் வெளியில் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள `மீ டூ’ (நானும் பாதிக்கப்பட்டேன்) என்ற பெயரிலான இயக்கத்தை மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. மேலும், பாலியல் வன்முறைகளை அம்பலப்படுத்தும் பெண்களை அவமதிக்காதீர் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் அக்டோபர் 12 அன்று நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் துவங்கியது. கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தாங்கள் சந்தித்த பாலியல் வன்முறை கள், சீண்டல்கள் குறித்து வெளியே சொல்லும் தைரியம் இல்லாமல் இருந்த பல பெண்கள் தற்போது ‘மீ டூ’ என்ற இயக்கத்தை பயன்படுத்தி வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.2006 இல் அமெரிக்காவின் நியூயார் க்கில் தாரானா புர்க் என்ற பெண் #Me Too என்ற இயக்கத்தை தொடங்கினாலும் சமூக வலைதளங்களில் 2017 அக்டோ பரில் தான் வைரலாக பரவியது.

கடந்த ஆண்டு ராயா சர்க்கார் என்ற சட்ட மாணவி, கல்வி நிறுவனத்தில் தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை களை பட்டியல் இட்டதில் இருந்து இந்தியாவில் இந்த இயக்கம் அறிமுக மானது. தற்போது இந்தியாவில் கலைத் துறையில், விளையாட்டுத் துறையில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சொல்லி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசின் வெளியுறவு அமைச்சராக இருக்கும் எம்.கே. அக்பர் பத்திரிக்கை துறையில் இருந்த போது தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 10 பெண்கள் புகார் கூறி இருக்கின்ற சூழலில் அவர் குறித்த புகாரின் மீது பாஜக மௌனம் காத்துக் கொண்டு இருப்பது கண்டிக்கத் தக்கது.

தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொல்வது அவமானம் எனக் கருதி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சமூகச் சூழலில் இது போன்று தைரியமாக வெளி
யில் வந்து “இது எனக்கு ஏற்பட்ட அவ மானம் இல்லை குற்றம் செய்தவருக்கு ஏற்பட்ட அவமானம் “எனக் கருதி பொது வெளியில் இத்தகைய கொடூரங்களை வெளிப்படுத்தும் இயக்கத்தை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வர வேற்கிறது.

தற்போதுள்ள ஆணாதிக்க சிந்தனை கொண்ட பார்வைக்கு சவால் விடக்கூடிய விதத்தில், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி இருக்கும் பெண்களை ஜனநாயக மாதர் சங்கம் பெருமையோடு பார்க்கிறது. இவர்களது குரலை ஒடுக்குவதையும், இவர்கள் நடத்தை குறித்து அவதூறு களை சமூக வலைதளங்களில் அள்ளி வீசுவதையும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது.

அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டியை அமைக்க தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள சமத்துவம் பெண்களுக்கு பணி யிடங்களில் கிடைப்பதை உறுதி செய்யக்கூடிய விதத்தில் பாலியல் வன்முறை குறித்து ஆணாதிக்க மதிப்பீடுகளை எதிர்த்து பிரச்சாரங்களை அரசே செய்திட வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: