சென்னை
3000 ஸ்மார்ட் வகுப்புகள்
பள்ளி மாணவர்களை தொழில்நுட்பத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ப
தற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை முயற்சித்து வருகிறது.தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள் ளார்.

சென்னை
அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சிலரை பாதுகாக்க முயற்சிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கக் கோரி உத்தர விட்டுள்ளது.

சென்னை
புதிய ரயில்களில் தானியங்கி கதவு
சென்னை நகரில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை என்றும் புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகளை பொருத்த முடியும் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது.

புதுதில்லி
50 ஆயிரம் பேர் விண்ணப்பம்
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுக்கு சுமார்  50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. குறிப்பாக 49 ஆயிரத்து 992 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் பேர் அதிகரித்துள்ள தாக புள்ளி விவரங்கள் கூறி யுள்ளன. பல்வேறுதுறையை சேர்ந்தவர்கள் இந்தவிருதுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

புதுதில்லி
13 எய்ம்ஸ் மருத்துவமனைகள்
நாட்டில் புதிதாக 13 எய்ம்ஸ்  மருத்துவமனைகள் தொடங்கப் படும். 70 மருத்துவக்கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளாக மாற்றப்படும். 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்
களும் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச் சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.