ஜோ ரூட் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அரைசதத்தைச் சதமாக மாற்றுவதில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.அரைசதத்தைச் சதமாக மாற்றுவதில் இந்தியாவின் விராட் கோலி,ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கில்லாடிகள்.தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஜோ ரூட்டை தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றியே சிந்திக்க வேண்டும்.இதனால் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது.அவருக்குப் பதிலாக ஜோஸ் பட்லரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்.அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட முடியும்.அவருடன் நான் பணியாற்றிய அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: