திருச்சி
திருச்சியிலிருந்து துபாய்க்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம், திருச்சி விமான  நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் மீது மோதி, சுற்றுச் சுவரிலும் இடித்துள்ளது. இதில் 5 ஆண்டெனாக்கள், கண்காணிப்பு கருவி, கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்தது.
ஆனாலும் திருச்சியிலேயே மீண்டும் தரையிறங்க முடியாத சூழ்நிலையில், மும்பையில் விமானிகள் சாதுர்யமாக தரை யிறக்கியதால், அதிலிருந்த 130 பயணிகள் உயிர் தப்பினர்.

விமானப் போக்குவரத்து பொது இயக்குனரக அதிகாரிகள் சம்பவ இடத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தியுள்ளதாக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ஏஏஐபி (AAIB)) எனப்படும் விமான விபத்துகளுக்கான விசாரணை அமைப்பும் விசாரணை நடத்த உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: