தரங்கம்பாடி:
இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 192 ஆவது பிறந்தநாள் விழா வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி மயிலாடுதுறை சென்டீனியல் லயன் சங்கம் சார்பில் அதன் தலைவர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கவிஞர் சிவக்குமார்,பொருளாளர் ராஜா, வேதநாயகம் பிள்ளையின் உறவினரான பால்இருதயராஜ் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வேதநாயகம் பிள்ளை புகழை பறைசாற்றும் வகையில் மயிலாடுதுறையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பணியாற்றிய மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிலை வைத்து மரியாதை செய்வதோடு, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென மயிலாடுதுறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: