புதுதில்லி, அக்.11-

மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் உடனடியாகப் பதவி விலகிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், பல்வேறு செய்தியேடுகளில் ஆசிரியராக இருந்த சமயத்தில், பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொண்டது குறித்தும், எவராலும் ஏற்கப்பட முடியாத விதத்தில் நடந்துகொண்டுள்ளது குறித்தும் ஏழு பெண் செய்தியாளர்கள் முன்வந்து தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் மோசமானவை களாதலால், எம்.ஜே. அக்பர் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இணை அமைச்சராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

(ந.நி.)

 

 

Leave A Reply

%d bloggers like this: