தில்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது, கறுப்பு பண முறைகேடு வழக்கு உள்பட பல வழக்குகள்  நிலுவையில் உள்ளன. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்துள்ளன.  இந்த வழக்குகள் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்த தப்பிக்கும் வகையில் முன்ஜாமின் பெற்றுள்ளனர். கொடைக்கானலில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலமும், ஊட்டியில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மற்றொரு பங்களாவும், டெல்லி ஜோர்பா உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள நிலமும் முடங்கப்பட்டுள்ளன. இதைபோன்று வெளிநாடுகளான லண்டனில் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துகளும், பார்சிலோனா மற்றும் ஸ்பெயினில் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதேபோல இருவருக்கும் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ள ரூ.90 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

Leave A Reply

%d bloggers like this: