ஐதராபாத்,
தித்லி புயல் காரணமாக ஆந்திராவில் 8 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி  ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.

தித்லி புயாலால் ஆந்திரத்தின் விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை, வாழை,எலுமிச்சை, மாமரம் ஆகியவை சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  2 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.   தித்லி புயலின் பாதிப்புகளில் சிக்கி விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில்  8 பேர் உயிரிழந்தனர்.  புயல் காரணமாகக் கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
கடற்கரையோரங்களில் உள்ள சாலைகள் புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளது.  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.  மேலும் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: