விருதுநகர்,
விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உணவு பரிமாறும் இடத்தில், குடிநீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்த 4 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்திரகிரிபுரத்தை சேர்ந்த தம்பதி தங்கப்பாண்டி – சுகந்தி. சுகந்தி தற்போது கர்ப்பிணியாக  உள்ளார். இவர் தனது கர்ப்பகால பரிசோதனைக்காக, அருகே உள்ள கன்னிச்சேரி அரசு ஆரம்ப சுகாதர மையத்திற்கு சென்றார். அப்போது தன்னுடன் தனது மகள் கிரிஷ்மாவையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனை முடிந்த பிறகு அனைத்து கர்ப்பிணி  பெண்களுக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து சுகந்தியும் அவரது மகள் கிரிஷ்மாவும் உணவு அருந்தியுள்ளார். அதன்பின்னர் சிறுமி அங்குள்ள தண்ணீர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை, குடிநீர் என்று நினைத்து குடித்துள்ளார். இதை அடுத்து குழந்தை கிரிஷ்மா ரத்த  வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: